முழு கொள்ளளவை எட்டும் மிருகண்ட அணை! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - Mirugandanathi Dam - MIRUGANDANATHI DAM
🎬 Watch Now: Feature Video
Published : Aug 12, 2024, 10:17 AM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மிருகண்ட அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கலசப்பாக்கத்தில் உள்ளது மிருகண்ட அணை. இந்த அணையின் மொத்தக் கொள்ளவு 87.23 மில்லியன் கன அடியும், உயரம் 22.97 அடியுமாகும். இந்தநிலையில் திருவண்ணாமலை,செங்கம், ஜமுனாமாத்தூர் மற்றும் கலசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மிருகண்ட அணையில் 255 கன அடி நீரானது வந்துக் கொண்டு இருக்கிறது.
இதன் காரணமாக அணையின் கொள்ளவு 20 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து நீரின் வரத்து அதிகரித்துக் காணப்படுவதால் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆற்றின் கரையோரத்தில் உள்ள காந்தபாளையம், நல்லான் பிள்ளைபெற்றால், கங்காலமாதேவி, சிறுவள்ளூர், எலத்தூர், வில்வாரணி ஆகிய பகுதியில் ஆற்றங்கரையத்தில் வசித்து வருபவர்கள் உடனடியாக வெளியேறும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும் நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளானர்.