பென்காக் சிலாட் போட்டியில் பதக்கம் வென்று விழுப்புரம் மாணவர் சாதனை!
🎬 Watch Now: Feature Video
Published : Oct 21, 2024, 8:59 AM IST
விழுப்புரம்: உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 8-வது சேம்பியன்ஷிப் பென்காக் சிலாட் போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் வந்த மாணவருக்கு மேளதாளம் முழங்க உறவினர்கள் சிறப்பு வரவேற்பு அளித்துள்ளனர்.
உஸ்பெகிஸ்தான் நாட்டில் கடந்த 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 8வது ஆசிய பென்காக் சிலாட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த 36 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில், விழுப்புரம் விக்கிரவாண்டி அருகேயுள்ள பொன்னங்குப்பம் கிராமத்தைச் சார்ந்த மோகனவேல் என்ற கல்லூரி மாணவர் கலந்து கொண்டு வெண்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய மாணவரை விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், மேள தாளம் முழங்க, பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து உற்சாக வரவேற்றனர்.
அப்போது பேசிய மாணவன், “ஆசிய சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தமிழக அரசு மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி அளித்ததால், பண பிரச்சனை இல்லாமல் பயிற்சி மேற்கொள்ள முடிந்தது. தனக்கு உதவியவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.