திருப்பத்தூரில் காவலரைத் தாக்க முயன்ற இருவர் கைது! - youths attack police - YOUTHS ATTACK POLICE
🎬 Watch Now: Feature Video
Published : May 11, 2024, 9:05 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர், ஆம்பூர் அருகே மதுபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் காவல் துறையினரைத் தாக்க முயன்றதால் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் கிராமிய காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் அடுத்த கென்னடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த அப்பு (34) மற்றும் சஞ்ஜய் (24) ஆகிய இரண்டு இளைஞர்கள் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்துள்ளனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித் திரிந்துள்ளனர். இந்த நிலையில், அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது இரண்டு இளைஞர்களும், காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்க முயன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இரண்டு இளைஞர்களையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இருவரையும் ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆம்பூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.