LIVE: 75வது குடியரசு தின விழா: சென்னையில் கொடியேற்றும் ஆளுநர், விருது வழங்கும் முதலமைச்சர்! - சென்னை கடற்கரை சாலை
🎬 Watch Now: Feature Video
Published : Jan 26, 2024, 7:51 AM IST
|Updated : Jan 26, 2024, 9:23 AM IST
சென்னை: 75வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறாா். அதன் நேரலை காட்சிகளை பார்த்து வருகிறோம்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜா் சாலை பகுதியில் உள்ள உ ழைப்பாளா் சிலை அருகே செய்யப்பட்டுள்ளன. அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில், ஆளுநா் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறாா்.
குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றிவைக்கும் ஆளுநா் ஆர்.என்.ரவி, முப்படையினா், காவல்துறையினா், தேசிய மாணவா் படை, பல்வேறு காவல் பிரிவினா், வனம் மற்றும் தீயணைப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறாா். இதைத் தொடா்ந்து, பல்வேறு கலைக் குழுக்களின் நாட்டிய நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
இதனைத் தொடா்ந்து, மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீா் விருது, திருந்திய நெல் சாகுபடிக்கான விருதுகள், மதுவிலக்கு தொடா்பான காந்தியடிகள் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறாா். குறிப்பாக மதுரையில் அரசுப் பள்ளிக்கு சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய ஆயி பூரணம் அம்மாவுக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.