செஸ் உலக சாம்பியன் குகேஷ்-க்கு பாராட்டு விழா - GUKESH CHESS CHAMPION
🎬 Watch Now: Feature Video
Published : Dec 17, 2024, 6:46 PM IST
|Updated : Dec 17, 2024, 8:00 PM IST
சென்னை: சிங்கப்பூரில் நடைபெற்ற "World Chess Championship" தொடரின் 14வது போட்டியில் சீனாவின் வீரர் டிங் லாரனை வென்று உலக சாம்பியன் என்ற பட்டத்தை இந்திய வீரர் குகேஷ் பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதையடுத்து, பிரதமர் தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். மேலும், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்-க்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில், தற்போது சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு சிறப்பான வரவேற்பும் பாராட்டுக்களும் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குகேஷ்-க்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
Last Updated : Dec 17, 2024, 8:00 PM IST