கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்.. தேனியில் பதைபதைக்க வைக்கும் சம்பவம்! - periyakulam bus accident - PERIYAKULAM BUS ACCIDENT
🎬 Watch Now: Feature Video
Published : Jun 28, 2024, 6:13 PM IST
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பங்களாப்பட்டி பிரிவு பகுதியில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற போது, அவ்வழியாக திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞர் ஜெயபிரகாஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, படுகாயம் அடைந்தவரை மீட்டு அருகில் இருந்தவர்கள் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
இந்த சிசிடிவி காட்சியில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பேருந்து வருவதை பார்த்துக் கொண்டே சாலையைக் கடப்பதும், அப்பொழுது தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வேகமாக வந்து இருசக்கர வாகனத்தில் மீது மோதிய போது, அதில் பயணித்த ஜெயபிரகாஷ் தூக்கி வீசப்படுவது உள்ளிட்ட பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இந்த விபத்து குறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.