உலக சாம்பியன்ஷிப் படகு போட்டியில் பங்கேற்கும் ராமச்சந்திரா பல்கலைக்கழக அணி! - international boat competition - INTERNATIONAL BOAT COMPETITION
🎬 Watch Now: Feature Video
Published : May 18, 2024, 6:56 PM IST
சென்னை: பல்கலைக்கழக்கங்களுக்கான உலக சாம்பியன்ஷிப் படகு போட்டி வரும் ஜூலை 3ஆம் தேதி தொடங்கி 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கான விளையாட்டு ஆணையம் நடத்தும் இப்போட்டி, நெதர்லாந்தில் நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன.
அந்த வகையில், இந்திய பல்கலைக்கழகங்கள் அணியில் ஒரு அணியாக, சென்னை ராமச்சந்திரா பல்கலைக்கழக அணி விளையாட உள்ளது. இந்த அணியில் பல்கலைக்கழக பிஎஸ்சி விளையாட்டு துறையைச் சேர்ந்த ஏக்சித் சாய், ரோஸ் மாஸ்டிகா, பிஎஸ்சி சைக்காலஜி பிரிவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இந்த நிலையில், இவர்கள் மூவருக்கும் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் வேந்தர் வெங்கடாசலம் 9 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கியுள்ளார். அதேபோல், இவர்களுக்கு பயிற்சி அளித்த மூத்த பயிற்சியாளர் பாஸ்கரா ரெட்டிக்கு 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பாஸ்கரா ரெட்டி தற்போது இந்திய பல்கலைக்கழகங்கள் படகுப் போட்டி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பேசிய மாணவ - மாணவிகள், "கட்டாயம் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வோம்" என நம்பிக்கை தெரிவித்தனர்.