LIVE: தமிழ்நாடு அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர்.. சட்டப்பேரவை நேரலை! - Tamil Nadu assembly
🎬 Watch Now: Feature Video
Published : Feb 12, 2024, 10:00 AM IST
|Updated : Feb 12, 2024, 11:00 AM IST
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் இன்று (பிப்.12) காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழில் தனது உரையை வாசிக்க தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்தை தொடக்கத்திலும் இறுதியிலும் வாசிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து தனது உரையை முடித்துகொண்டார். தமிழ்நாடு அரசின் உரையை முற்றிலும் புறக்கணித்தார். கடந்தாண்டு குறிப்பிட்ட பகுதியை மட்டும் புறக்கணித்த நிலையில் இந்த ஆண்டு முழு உரையையும் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்து வருகிறார். இந்த உரை முடிந்தவுடன் இன்று பிற்பகல் சபாநாயகர் அப்பாவு அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடத்துவதற்காக எத்தனை நாட்கள் அவையை நடத்துவது, எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 3 நாட்களுக்கு நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் தாக்கல் எப்போது?: நடப்பாண்டிற்கான நிதிதிலை அறிக்கை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பிப்.19 ஆம் தேதியும், வேளாண் நிதிநிலை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பிப்.20 ஆம் தேதியும் தாக்கல் செய்ய உள்ளனர்.