வைக்கம் நிகழ்வில் கைகோர்க்கும் தமிழ்நாடு, கேரளா முதலமைச்சர்கள்!
🎬 Watch Now: Feature Video
Published : 2 hours ago
|Updated : 42 minutes ago
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், கேரள மாநிலம், வைக்கத்தில் 'வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்' நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. இதில், தந்தை பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகத்தை திறந்து வைத்து இருமாநில முதலமைச்சர்களும் சிறப்புரை ஆற்றுகிறார்கள். இது குறித்த காணொளி ஒன்றை முன்னதாகப் பதிவிட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நூறாண்டுகளுக்கு முன்பு நமது சமூகம் எப்படியிருந்தது, இப்போது நாம் எங்கு வந்தடைந்திருக்கிறோம் என்று சற்று நினைத்துப் பாருங்கள். இந்த மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நான் நேரில் கலந்துகொள்கிறேன்." என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது நிகழ்வுக்காக கேரளா சென்றுள்ள முதலமைச்சரை, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் வரவேற்றார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், "துடிப்பான கலாச்சாரம், அமைதியான அழகு, முன்னேற்றம் ஆகியவற்றின் பூமியான கேரளாவிற்கு, வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவுக்காக வந்தேன். ஒவ்வொரு முறை நான் இங்கு வரும்போதும், எங்கள் திராவிட உடன்பிறப்புகளின் அன்பான வரவேற்பு மற்றும் உண்மையான விருந்தோம்பல் என்னை நெகிழ்ச்சியடைய செய்தது. கேரளாவை உண்மையிலேயே வீடு போல் உணர்கிறேன்," என்றார்.
Last Updated : 42 minutes ago