TN Assembly Session: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் தொடரின் 4ஆம் நாள் அமர்வு! - தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்
🎬 Watch Now: Feature Video
Published : Feb 15, 2024, 10:07 AM IST
|Updated : Feb 15, 2024, 12:37 PM IST
சென்னை: நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில், 3வது நாள் அமர்வு நேற்று (பிப். 14) நடைபெற்றது.
அதில் ஒரே நாடு ஒரு தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும், தொகுதி மறுசீரமைப்பு மறுப்பு ஆகிய 2 தனித் தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்து பேசினார். அப்போது, இவை இரண்டுமே மக்களாட்சியைக் குலைக்கும் செயல்கள் என்பதால், இவை இரண்டுக்கும் எதிராக நாம் அனைவரும் ஒருசேரக் குரல் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றார்.
மேலும், சில மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்து, தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால், ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் தானாக முன்வந்து பதவி விலகுவார்களா என்றும், இதைவிட காமெடிக் கொள்கை இருக்க முடியுமா என்றும் சரமாரியாக கேள்விகளை ஸ்டாலின் எழுப்பினார். அதனைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு எதிரான 2 தனித் தீர்மானங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
தற்போது, இன்று (பி.15) தமிழக சட்டப்பேரவையில் 4ஆம் நாள் அமர்வு நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில், பிப்.13 மற்றும் பிப்.14ஆம் தேதி நடைபெற்ற ஆளுநர் உரை மற்றும் விவாதங்கள் மீதான பதிலுறையை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.