இரவு காங்கிரஸ் பிரச்சாரத்தில் வாக்குவாதம்.. பகலில் அதிமுக வேட்பாளருக்கு ஆரத்தி! சிவகங்கையில் நடப்பது என்ன? - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 3, 2024, 3:01 PM IST

சிவகங்கை: நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, ஒரே கட்டமாகத் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதனால், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான கார்த்திக் சிதம்பரத்தை ஆதரவு அளித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) காரைக்குடி அருகே உள்ள மித்ராவயலில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பிரச்சாரம் மேற்கொண்ட அவரிடம், அப்பகுதியில் உள்ள மதுக் கடைகளால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி, இளம் வயதிலேயே விபத்துக்களில் இறந்து விடுவதாகவும், அதனால் அங்குள்ள மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக ஒரு பெண் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கியவாறு, பேசிக்கொண்டே இருந்தார். 

இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல், ப.சிதம்பரம் அங்கிருந்து சென்றுவிட்டதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், இன்று (புதன்கிழமை) அப்பகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்த சிவகங்கை அதிமுக வேட்பாளர் பனங்குடி சேவியர்தாஸ், தான் மித்ராவயல் கிராமத்தில் தான் பிறந்தவர் என்றும் அப்பகுதியில் உள்ள மதுக் கடையை அகற்றுவதாகவும் வாக்குறுதி அளித்தார். இதையடுத்து, அந்த பகுதிக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற சேவியர்தாசுக்கு, அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.