சென்னையில் ஹோட்டலில் சாப்பிட வந்தவர்களைத் தாக்கிய வட மாநிலத்தவர்.. வீடியோ வைரல்! - SERVER ATTACK IN HOTEL at Chennai - SERVER ATTACK IN HOTEL AT CHENNAI

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 10:00 PM IST

சென்னை: சென்னை அண்ணா சாலை, பெரிய மசூதி எதிரே உள்ள தனியார் உணவகத்திற்கு, காவலர் மற்றும் அவரது நண்பர் சாப்பிடச் சென்றுள்ளனர். அப்போது அங்கு பணிபுரியும் வடமாநிலத்தவர், சாப்பிட வந்தவர்களை அவர்கள் அமர்ந்த இருக்கையை விட்டு, வேறு இருக்கையில் அமரச் சொல்லித் தரக்குறைவான வார்த்தையில் பேசியதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஊழியரிடம் “நாங்கள் இதே இருக்கையில் தான் அமர்ந்து சாப்பிடுவோம். இங்கு அமர்ந்து சாப்பிடுவதால் என்ன தவறு?” என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வடமாநிலத்தவர் கட்டை, கரண்டி உள்ளிட்ட ஆயுதங்களால் இருவரையும் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில், காவலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது சட்டை கிழிந்ததாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், இந்த தாக்குதல் நடைபெற்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.