தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! - Vijayakanth
🎬 Watch Now: Feature Video
Published : Feb 13, 2024, 10:08 AM IST
|Updated : Feb 13, 2024, 12:18 PM IST
சென்னை: இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நடைபெறுகிறது. இதன்படி, இன்று கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ஆர்.வடிவேல், தெய்வநாயகம், தங்கவேல், துரை ராமசாமி, கு.க.செல்வம் மற்றும் எஸ்.ராசசேகரன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படுகிறது.
அதே போன்று, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன், கண் மருத்துவர் எஸ்.பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசாவின் முன்னாள் ஆளுநருமான எம்.எம்.ராஜேந்திரன் மற்றும் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு மெளன அஞ்சலி செலுத்தப்படும்.
இதனையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 9(1)-இன் கீழ் மாற்றுத் தலைவர்கள் பட்டியலை பேரவைத் தலைவர் அறிவிப்பார். இதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன் முன்மொழிவார். இதனைத் தொடர்ந்து, அதன் மீதான விவாதம் நடத்தப்படும். இதனிடையே, சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உரிய துறை அமைச்சர்கள் பதிலளிப்பர்.