தென்னை ஓலையில் தோனியின் உருவத்தை வரைந்து அசத்திய புதுக்கோட்டை இளைஞர்கள்! - dhoni coconut leave art - DHONI COCONUT LEAVE ART
🎬 Watch Now: Feature Video
Published : May 18, 2024, 7:58 PM IST
புதுக்கோட்டை: ஐபிஎல் லீக் போட்டியின் கடைசி நாளான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. இதில் வெல்லும் அணி பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்கிஸ் அணியை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடன், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த நேதாஜி (தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்) என்ற இளைஞரும், குகன் (மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்) என்ற இளைஞரும் சேர்ந்து தென்னை ஓலையில் தோனியின் உருவத்தை வரைந்து அசத்தி உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், “இந்த போட்டியில் சிஎஸ்கே அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். ஒருவேளை வெற்றி வாய்ப்பை இழந்தால், தோனி இதற்கு மேல் ஐபிஎல் லீக்கில் விளையாடுவாரா என்பது சந்தேகம். அடுத்த ஐபிஎல் லீக்கில் அவர் விளையாடுவதை பார்ப்போமா என்று தெரியவில்லை. அதனால் அவர் மீது எங்களுக்கு இருக்கும் அளவில்லா பற்றை வெளிப்படுத்தும் வகையில் தென்னை ஓலையில் நாங்கள் வரைந்து உள்ளோம்” என்றனர்.