தூத்துக்குடி ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி.. QR கோடு டிக்கெட் புக்கிங் அறிமுகம்! - thoothukudi qr code railway ticket - THOOTHUKUDI QR CODE RAILWAY TICKET
🎬 Watch Now: Feature Video
Published : Aug 22, 2024, 5:12 PM IST
தூத்துக்குடி: தெற்கு ரெயில்வேயில் நவீன காலத்திற்கு ஏற்ப பயணிகள் பணமற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பயணிகள் தங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள ஆப்களை பயன்படுத்தி கியூஆர் கோடு மூலம் எளிதில் டிக்கெட் பெறும் வசதி தூத்துக்குடி ரயில் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த வசதி மதுரை கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 106 ரயில் நிலையங்களில் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகள் பணமற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும். இந்த முறையில் பயணிகளுக்கும், கவுண்டர்களில் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கும் உள்ள சில்லறை பிரச்சினைகளும் தவிர்க்கப்படும்.
இதுகுறித்து பயணி ராமர் ஈடிவி பாரத் செய்திகளிடம் கூறுகையில், “தூத்துக்குடி ரயில் நிலையங்களில் கியூஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதியானது மிகத் தேவையான சேவை. இந்த சேவையை பொறுத்தமட்டில், கையில் பணம் இருக்க வேண்டிய என அவசியம் இல்லை. ஆண்ட்ராய்ட் செல்போன் இருந்தாலே போதுமானது. இன்று இருக்கக்கூடிய நவீன காலகட்டத்தில் கியூஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.