உதகையில் நாளை துவங்குகிறது உலகப் புகழ் பெற்ற மலர் கண்காட்சி.. - Ooty sparkling flower garden - OOTY SPARKLING FLOWER GARDEN
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-05-2024/640-480-21432660-thumbnail-16x9-nil.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : May 10, 2024, 4:56 PM IST
|Updated : May 10, 2024, 6:00 PM IST
நீலகிரி: உதகையிலுள்ள அரசு தாவரவியல் பூங்காவில் உலகப் புகழ்பெற்ற 126-வது மலர் கண்காட்சி நாளை துவங்க இருக்கிறது. மேலும் கூடுதலாக இரவு நேரத்திலும் பூக்களுடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிடப் பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கண்காட்சிக்காகப் பூங்காவில் 5லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தற்போது இந்த செடிகள் வண்ண மலர்களால் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருக்கிறது. மேலும், பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் 45 ஆயிரம் மலர் தொட்டிகளால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வண்ண ரோஜா மலர்களால் பிரமாண்ட டிஸ்னி வேர்ல்டு மாதிரி அமைய உள்ளது. 80 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு நீலகிரி மலை ரயில், காளான், ஆக்டோபஸ், தேனி மற்றும் மலர்க் கோபுரங்கள் உட்பட 10 வகையான உருவங்கள் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெற இருக்கும் இக்கண்காட்சியைத் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வேளாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா மற்றும் மாவட்ட ஆட்சியர் மு.அருணா ஆகியோர் நாளை (மே.11) காலை தொடங்கி வைக்க உள்ளனர்.