மகளிர் தினக் கொண்டாட்டம்: மக்களோடு நடனமாடிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா! - Nilgiris Collector dance
🎬 Watch Now: Feature Video
Published : Mar 8, 2024, 6:38 PM IST
நீலகிரி: உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மார்ச் 8ஆம் தேதியான இன்று மகளிர் தினம் உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் நீலகிரியில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் திட்டம் சார்பில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மகளிர் தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த மகளிர் தின விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா கலந்து கொண்டு சுற்றுலாப் பயணிகளுடன் பூங்காவில் கேக் வெட்டி, மகளிர் தின விழாவை உற்சாகமாகக் கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் இன மக்கள் தங்களது கலாச்சார நடனமாடினர். அவர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா நடனமாடியது அங்கிருந்தவர்களை வெகுவாகக் கவர்ந்தது. அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் சுற்றுலாப் பயணிகள் இணைந்து படுகர் இன மக்களின் கலாச்சார நடனமாடி உற்சாகமடைந்தனர்.