சிம்ஸ் பூங்காவின் 64-வது பழக்கண்காட்சி நிறைவு! - Sims Park 64th Fruit Exhibition
🎬 Watch Now: Feature Video
Published : May 27, 2024, 9:58 AM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கடந்த 24ஆம் தேதி துவங்கிய 64-வது பழக்கண்காட்சி, 3 நாட்கள் வெகுசிறப்பாக நடைபெற்ற நிலையில் நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்த கண்காட்சியில் 1.75 டன் திராட்சைப் பழங்களை கொண்ட 15 அடி உயரமுள்ள கிங்காங் உருவம், தோட்டக்கலைத் துறை மூலம் 150 ரக அரியவகை பழங்கள் போன்றவை இடம் பெற்றிருந்தன. அதுமட்டுமின்றி, குழந்தைகளைக் கவரும் விதமாக கார்ட்டூன் பொம்மைகள், டைனோசர், தலையாட்டு பொம்மை, பட்டாம்பூச்சி போன்ற உருவங்கள் சுமார் 1.50 டன் எடையிலான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, பேரீச்சம்பழம், செர்ரி உள்ளிட்ட பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியின் இறுதி நாளான நேற்று, அனைவரையும் கவரும் வண்ணம் இருந்த உருவங்களுக்கு 7 சுழல் கோப்பைகளும், 22 முதல் பரிசு, 5 இரண்டாம் பரிசு, 90 சிறப்பு பரிசுகள் உள்ளிட்டவற்றை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிபிலா மேரி, குன்னூர் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழங்கினர்.
இந்த பழக்கண்காட்சியில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 1,953 பேர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தோட்டக்கலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.