சத்தியமங்கலத்தில் களைகட்டிய வள்ளி கும்மி ஆட்டம்.. சிலிர்ப்பூட்டும் வீடியோ! - Valli Kummi Attam - VALLI KUMMI ATTAM
🎬 Watch Now: Feature Video
Published : May 3, 2024, 10:01 PM IST
ஈரோடு: சத்தியமங்கலத்தில் நவீன் பிரபஞ்ச நடனக் குழுவினரின் வள்ளி கும்மியாட்ட அரங்கேற்றம், சுந்தரம் மஹால் திருமண மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் ஒரே மாதிரியான சீருடை அணிந்து நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிகழ்ச்சிக்கு சுந்தர் மஹால் நிர்வாக இயக்குநர் சுந்தரம் தலைமை வகித்தார். காமதேனு கலைக் கல்லூரி தாளாளா் ஆர்.பெருமாள்சாமி, நகா்மன்றத் தலைவர் ஜானகி ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வள்ளி கதையை பல்வேறு பரிமாணங்களில் நவீன பிரபஞ்ச நடனக்குழுவினர் பாடலாக்கி பாடி ஆடினர். இதில், "மயிலிறகு ஆமாம் சொல்லு" என்ற பாடல் அரங்கத்தில் அனைவரையும் தாளம் போட வைத்தது. இதில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் என அனைவரும் பச்சை நிறத்தில் ஒரே மாதிரியான ஆடை அணிந்து நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சத்தியமங்கலத்தில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்டத்தைக் காண பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். இதைத் தொடா்ந்து, சிறப்பாக ஆடியவா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.