தஞ்சையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டிராக்டர் ஓட்டி நூதன முறையில் வாக்கு சேகரிப்பு! - lok sabha election 2024
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: வருகின்ற 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் தனது கட்சி தொண்டர்களுடன் தஞ்சை மாவட்டம் காசநாடு, கோவிலூர், நடுவூர் உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் நடுவூர் ஏரிக்கரை கிராமத்தில் உள்ள அருள்மிகு அக்னி காளி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
இதனைத் தொடர்ந்து வேட்பாளர் ஹூமாயூன் கபீர் மற்றும் அவருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பெண்களும் தலையில் பச்சை துண்டை கட்டிக் கொண்டு வயலில் நடவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்களிடம் துண்டுப் பிரசுரத்தைக் கொடுத்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து நாற்று வாங்கிய வேட்பாளரும், பெண் தொண்டர்களும் நாட்டுப்புறப் பாடல் பாடிக் கொண்டே நாற்று நட்டனர்.
அதே போல், வேட்பாளர் ஹூமாயூன் கபீர் வயலில் டிராக்டர் ஓட்டி உழவு பணியில் ஈடுபட்டார். மேலும், விவசாயப் பணியில் ஈடுபட்ட பெண்களிடம் இரண்டு கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்தது போதும். இந்த முறை எங்களுக்கு வாய்ப்பளியுங்கள் என கூறி வாக்கு சேகரித்தார்.