முறத்தால் பக்தர்களை அடிக்கும் விநோத திருவிழா- பெரம்பலூரில் கோலாகலம்! - DRAUPADAI AMMAN TEMPLE FESTIVAL - DRAUPADAI AMMAN TEMPLE FESTIVAL
🎬 Watch Now: Feature Video
Published : Jun 9, 2024, 6:58 AM IST
பெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டம் பிரம்மதேசம் அருள்மிகு திரௌபதை அம்மன் சமேத தர்மராஜா திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திருக்கோயிலில் திருவிழா கடந்த 31ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அர்ச்சுனன் வில் வளைத்தல், திரெளபதை அம்மன் திருக்கல்யாணம், உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான முறத்தால் அடிக்கும் விழா நேற்று (ஜூன்.8) வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கோயிலில் இருந்து பல்வேறு வேடமிட்டு மருளாளிகள் ஊர்வலமாக வந்து அருகில் உள்ள ஏரிக் கரையில அர்ச்சுனன் மாடு திருப்புதல் விழாவும், அதனையடுத்து வல்லாளகோட்டை இடித்து மருளாளிகள் முறத்தால் பக்தர்களை அடிக்கும் விநோத திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில், முறத்தால் அடி வாங்கினால் பேய், பில்லி சூனியம் பயம் தெளியவும், நினைத்த காரியம் நடக்கும் என்பதால் திரளான பக்தர்கள் முறத்தால் அடி வாங்கினர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும், இந்த விழாவில் பங்கேற்பதற்காக பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.