thumbnail

வீட்டுக்குள் புகுந்த உடும்பு! பரபரப்பான குடியிருப்புப் பகுதி

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 65 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டுமாடு, உடும்பு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தொண்டியாளம் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் உள்ள குடியிருப்பில் நேற்று உடும்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். 

இதையடுத்து அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின் சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர் வனத்துறையினர் வீட்டிற்குள் புகுந்த உடும்பை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். பின் மீட்ட உடும்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர். மேலும் இது போன்று விலங்கள் குடியிருப்புக்குள் புகுந்த உடன் வனத்துறைக்கு மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர தாங்களே அந்த விலங்குகளை துரத்தும் செயலில் ஈடுபட கூடாது என வனத்துறையினர் அப்பகுதி மக்களிடம் கேட்டுக் கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.