LIVE: திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்! - MK Stalin Trichy Campaign - MK STALIN TRICHY CAMPAIGN
🎬 Watch Now: Feature Video
Published : Mar 22, 2024, 6:55 PM IST
|Updated : Mar 22, 2024, 7:35 PM IST
திருச்சி: 2024 மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இன்று திருச்சி சிறுகனூரில் நடைபெறும் திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, திருச்சி மக்களவை வேட்பாளர் துரை வைகோ (மதிமுக) மற்றும் பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அதன் நேரலைக் காட்சிகள்.. முன்னதாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவுசெய்து, திமுகவின் தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியலையும் மார்ச் 20ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இன்று (மார்ச்22) முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்கிறார். “தீரர் கோட்டமாம், திருப்புமுனைகள் பல தந்த திருச்சியிலிருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறேன்” என அறிவித்திருந்தார் ஸ்டாலின். இவ்வாறு முதலமைச்சர் மேற்கொள்ளும் பரப்புரையில் பொதுமக்கள், அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த திமுகவின் மாவட்ட நிர்வாகிகள், தோழமைக் கட்சியினர், ஆதரவு இயக்கங்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்கின்றனர். திமுகவின் தலைமை நிர்வாகிகள், கொள்கைப் பரப்புச் செயலாளர்கள், தலைமை பேச்சாளர்களும் தொடர்ச்சியான பரப்புரைப் பயணங்களை மேற்கொள்ளவிருக்கின்றனர். பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் ஆகியவற்றுடன் திண்ணைப் பிரசாரமும் மேற்கொள்ளப்படுகின்றது.
Last Updated : Mar 22, 2024, 7:35 PM IST