Live: மதுரையில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை! - MK Stalin Madurai Campaign - MK STALIN MADURAI CAMPAIGN
🎬 Watch Now: Feature Video


Published : Apr 9, 2024, 6:51 PM IST
|Updated : Apr 9, 2024, 7:35 PM IST
மதுரை: 18வது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வருகிறார்.அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தற்போது மதுரை வண்டியூர் பகுதியில், திமுக கூட்டணியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் சு.வெங்கடேசன் மற்றும் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சி விருதுநகர் நாடாளுமன்ற வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் நேரடி காட்சிகளைக் காணலாம்..இந்த பிரச்சார கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட திமுகவினர், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
Last Updated : Apr 9, 2024, 7:35 PM IST