கொளத்தூர் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்..திமிலைப் பிடித்து பரிசை அள்ளிய காளையர்கள் - மாடுபிடி வீரர்கள்
🎬 Watch Now: Feature Video
Published : Feb 26, 2024, 1:56 PM IST
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (பிப்.26) தொடங்கியது. இந்தப் போட்டியினை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் ஐஏஎஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த போட்டியில் பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள், கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பிறகு வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதேபோல், மாடுபிடி வீரர்களும் பரிசோதனைக்குப் பிறகே இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.
இப்போட்டியில், 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துக்கொண்டு, வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கினர். மேலும், இப்போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பீரோ, எவர்சில்வர் பொருட்கள், மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்துக்கொண்டு ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர்.இந்த ஜல்லிக்கட்டில் நூற்றுக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.