யார்ட்ட கேட்கனுமோ அங்க கேளுங்க.. சட்டென மாறிய பொன்முடி.. என்ன காரணம்? - university VC issue - UNIVERSITY VC ISSUE
🎬 Watch Now: Feature Video
Published : Aug 28, 2024, 6:35 PM IST
சென்னை: சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பாக முதல் விண்வெளி தின விழாவையொட்டி, பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பரிசுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து மாணவிகள் கலந்து கொண்டனர். அறிவியல் ரீதியான வளர்ச்சி வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். அதுதான் பகுத்தறிவு சிந்தனை. மறைந்த முன்னாள் முதலமைச்சர்களின் சிந்தனையும் அது தான். அதைத்தான் முதலமைச்சரும் செயல்படுத்தி வருகிறார். பொறியியல் கலந்தாய்வில் மூன்று சுற்றிலும் இதுவரை மொத்தமாக ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 620 மாணவர்கள் சேர்ந்து இருக்கிறார்கள். கடந்தாண்டை விட பத்தாயிரம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்திருக்கிறார்கள்” என தெரிவித்தார்.
தொடர்ந்து, துணைவேந்தர் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, “யாரிடம் கேட்க வேண்டுமோ அங்கே கேளுங்கள்" என அமைச்சர் பொன்முடி கூறினார். மேலும், பொறியியல் கலந்தாய்வில் விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் வெளியானது குறித்து சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விசாரணை நடத்தி எஃப்ஐஆர் பதிவு செய்வார்கள் எனவும் தொழில்நுட்ப கல்வி ஆணையர் டி.ஆபிரகாம் தெரிவித்தார்.