சுத்தம் என்பது நமக்கு.. கும்பகோணம் காவிரியாற்றில் மெகா தூய்மைப்பணி! - Cauvery River Mega Cleaning Mission - CAUVERY RIVER MEGA CLEANING MISSION
🎬 Watch Now: Feature Video
Published : Jul 26, 2024, 4:36 PM IST
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சேவை சங்கங்கள், மாநகராட்சி, அரசு மருத்துவமனை, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார பிரிவு, கல்லூரி மாணவ மாணவியர்கள், தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து இன்று (ஜூலை26) ‘காவிரி நதியில் ஒரு நாள் மெகா தூய்மை பணியில்’ ஈடுபட்டனர்.
இது காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி நேரம் வரை என 4 மணி நேரத்திற்கு காவிரியாற்றில் மேலக்காவேரி, புதிய காவிரியாற்று பாலத்தில் இருந்து அரசு மருத்துவமனை, பொதுப்பணித்துறை அலுவலக பகுதி வரை சுமார் 2 கி.மீ தூரத்திற்கு நடைபெற்றது.
இதில் பலரும் ஒருங்கிணைந்து செயல்பட்ட நிலையில், சுமார் 20 டன் அளவிலான குப்பைகளை அகற்றி, படித்துறைகளை கூட்டி சுத்தம் செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து பேசிய பொதுமக்களுள் பலர், காவிரி நமது தாய் போன்று, நமக்கு நீர் ஆகாரமாய் இருக்கக்கூடியது, அத்தகைய ஆற்றில் பலர் அருவருக்கத்தக்க குப்பைகள், பாட்டில்களை வீசி வருகின்றனர். இனியாவது நாம் காவிரி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்