கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் ஆலயத்தில் களைகட்டிய மாசிமக தீர்த்தவாரி!
🎬 Watch Now: Feature Video
Published : Feb 24, 2024, 5:26 PM IST
அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் ஆலயத்தில், கடந்த 8ஆம் ஆண்டு மாசி மக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த மாசித் திருவிழா, வருகின்ற 25ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில், 8 நாட்கள் சிறப்பு யாகசாலை பூஜைகள், சிறப்பு அபிஷேகம், சுவாமி வீதி உலா போன்றவை நடைபெற்றதைத் தொடர்ந்து, மாசி 9ஆம் நாளான திருவிழாவாக, நேற்று (பிப்.23) திருத்தேர் பவனி நடைபெற்றது. இதில் 10ஆம் நாள் திருவிழாவான தீர்த்தவாரி இன்று (பிப்.24) நடைபெற்றது. இதை ஒட்டி, சோழீஸ்வரர் ஆலய யாக சாலையில் சிறப்பு யாக வேள்வி பூஜைகள் காலை நடத்தப்பட்டன.
பின்னர், சுவாமி அம்பாளை தோளில் சுமந்து சென்று, தீர்த்தவாரி குளக்கரையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தீர்த்தவாரியில் புனித நீராடி வழிபாடு செய்தனர்.