வீட்டுக்குள் புகுந்து நாயை கவ்விச் சென்ற சிறுத்தை.. அச்சத்தில் கோத்தகிரி மக்கள்! - leopard attack dog - LEOPARD ATTACK DOG
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07-07-2024/640-480-21892740-thumbnail-16x9-dog.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Jul 7, 2024, 9:38 PM IST
நீலகிரி: வீட்டுக்குள் புகுந்து சிறுத்தை நாய் கவ்விச் சென்றுள்ள நிலையில், சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீலகிரி பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் வனத்தை விட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளன. அவ்வாறு வரும் வனவிலங்குகள் மனிதர்களையும், வளர்ப்பு நாய்களையும் தாக்கி வரும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு (சனிக்கிழமை) நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கொட்டக்கொம்பை பகுதியில் சிறுத்தை ஒன்று வளர்ப்பு நாயை கவ்விச் சென்றது. அது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். சிறுத்தை வீடு புகுந்து நாயை கவ்விக் கொண்டு சென்றுள்ள நிலையில், உடனடியாக வனத்துறையினர் சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.