கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளி போல் வந்து ஆப்பிள் திருட்டு.. சிசிடிவி காட்சிகள் வைரல்! - KOYAMBEDU MARKET APPLE THEFT - KOYAMBEDU MARKET APPLE THEFT
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02-08-2024/640-480-22114299-thumbnail-16x9-marketraja.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Aug 2, 2024, 9:29 PM IST
சென்னை: சென்னை கோயம்பேடு கனி அங்காடிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். எந்நேரமும் பரபரப்பாக இருக்கும் கனி அங்காடியில் காணும் இடங்களில் எல்லாம் 3 சக்கர சைக்களில் பழப்பெட்டிகளை கூலித்தொழிலாளிகள் எடுத்துச் செல்வது வழக்கம். இந்த சூழலை சாதகமாக மாற்றிக்கொண்ட ஒரு நபர், 3 சக்கர சைக்களில் கூலித்தொழிலாளி போல வந்து, யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் ஆப்பிள் பெட்டிகளை திருடிச் சென்றுள்ளார்.
இவர் கனி அங்காடியில் ராஜேஸ் என்பவரின் கடையில் ஆள் யாரும் இல்லை என்பதை நோட்டமிட்டு, பின் சிறுக சிறுக 3 சக்கர சைக்கிள் மூலம் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் பெட்டிகளை திருடிச் சென்றூள்ளார். ஆப்பிள் பெட்டிகள் குறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வியாபாரிகள், யார் அந்த நபர் என்பதைக் கண்டறிய திருடுபோனதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் எதார்த்தமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று மீண்டும் தனது கை வரிசையைக் காட்டிய நபரை கையும் களவுமாக வியாபாரிகள் மடக்கிப் பிடித்தனர். மேலும், சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்துடன் அவரை கோயம்பேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.