மரத்தில் சிக்கியிருந்த ராஜ நாகம்; லாவமாக பிடித்த வனத்துறை ஊழியர்கள்! - King cobra RESCUE
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: 65 சதவீதம் வனப்பகுதிகளை கொண்டது நீலகிரி மாவட்டம், இங்கு புலி, கரடி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டு எருமைகள், யானை, மலை பாம்பு உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பர்லியார் அருகே தனியார் தோட்டம் ஒன்று உள்ளது. இந்தத் தோட்டத்தை பரத் என்பவர் பராமரித்து வருகிறார். இத்தோட்டத்தில் ஜாதிக்காய், கிராம்பு, பலாப்பழம் போன்றவை பயிரிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தோட்டத்தில் பணிபுரிந்துபவர்கள், அங்கே இருந்த மரம் ஒன்றில் ராஜநாகம் ஒன்று சிக்கி கொண்டிருந்ததைப் பார்த்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தோட்டத்தில் மரம் ஒன்றில் ராஜநாகம் ஒன்று சிக்கி இருப்பதாகவும், இப்பாம்பு மனிதர்கள் நடமாடும் பகுதியில் இருப்பதால் ஏதேனும் அசம்பாவிதத்தை ஏற்படுத்தி விடும் என வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற குன்னூர் வனச்சரகர் ரவிந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர், ராஜ நாகத்தை பத்திரமாக உயிருடன் மீட்டு, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் பகுதியில் ராஜ நாகம் காணப்படுவது அரிதாகவே உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.