புதுச்சேரி பல்கலையில் ரஜினி பாடலை பாடிய ஜப்பானியர் - வைரல் வீடியோ! - ரஜினி பாடலை பாடிய ஜப்பானியர்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 10:53 PM IST

புதுச்சேரி: ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் குபிக்கீ சென் (77). இவர் மிச்சுபிஷி (Mitsubishi) நிறுவனத்தில் இணைப்பு அதிகாரியாக பணிபுரிந்தார். இந்நிலையில், புதுச்சேரி வந்த குபிக்கீ சென், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சர்வதேச வர்த்தக கருத்தரங்கில் உரையாற்றினார். அப்போது, அவர் நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தில் 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடலை பாடி அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 150-ஆவது மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

1995ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் "முத்து" படம், ஜப்பான் நாட்டில் ஜப்பானிய மொழியில் வெளியிடப்பட்டது. அன்று முதல் இப்படத்தின் பாடல் ஜப்பான் நாட்டில் பிரபலமடைந்தது. அதனை குபிக்கீ சென் பாடி காட்டி அசத்தினார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஜப்பான் நாட்டில் முத்து திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ஜப்பான் நாட்டில் ரஜினிக்கு ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "புதுச்சேரி மக்கள் மண்ணின் மைந்தர்களுக்குத் தான் வாக்களிப்பார்கள்" - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.