நெல்லையிலும் போக்குவரத்து சிக்னலில் பசுமைப் பந்தல்! - Green Pandal in Nellai signals - GREEN PANDAL IN NELLAI SIGNALS
🎬 Watch Now: Feature Video
Published : May 10, 2024, 2:01 PM IST
திருநெல்வேலி: தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கோடை வெயில் அளவுக்கு அதிகமாக வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகி வருவதால், மக்கள் வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், பகல் நேரங்களில் வெப்ப அலை வீசுவதால், அத்தியாவசியப் பணிகளுக்காக வெளியே செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என அனைவரும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், வெயிலைச் சமாளிக்கும் வகையில், வாகன ஓட்டிகளின் வசதிக்காக மதுரை, கோயம்புத்தூர் மற்றும் சென்னை போன்ற நகரங்களிலும் வாகன ஓட்டிகளைப் பாதுகாக்கும் வகையில், போக்குவரத்து சிக்னல்களில் பச்சை நிற நிழற்கூரை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், அரசு எடுத்த இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. எனவே, இதன் தொடர்ச்சியாக, திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள கொக்கிரகுளம் போக்குவரத்து சிக்னலில் தனியார் ஜவுளி நிறுவனம் ஒன்று, நெல்லை மாநகர காவல்துறையினரிடம் முறைப்படி அனுமதி பெற்று, போக்குவரத்து சிக்னலில் நிழற்கூரை அமைத்துள்ளது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.