பக்ரீத் பண்டிகை: ஆடு, மாடுகள் விற்பனை அமோகம்! சந்தையில் அலைமோதிய கூட்டம்! - bakrid festival - BAKRID FESTIVAL
🎬 Watch Now: Feature Video
Published : Jun 16, 2024, 9:26 PM IST
திருப்பத்தூர்: இஸ்லாமியர்கள் ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை நாளில் குர்பானி கொடுப்பது வழக்கம். அந்த வகையில், இஸ்லாமியர்கள் குர்பானி கொடுப்பதற்காக சிலர் ஆடுகளைத் தேர்ந்தெடுப்பர். சிலர் மாடுகள், வெளிநாடுகளில் ஒட்டகம் என மாறுபடும். அந்தவகையில், நாளை ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட பெரிய பேட்டை பாலாற்று பகுதியில் பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று( ஜூன்.16) ஆடுகள், மாடுகள் விற்பனை செய்யும் சிறப்பு சந்தை நடைபெற்றது. இந்த சிறப்பு சந்தையில், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் மற்றும் மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
இந்த சிறப்பு சந்தையில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட ஆடுகள் ஆரம்ப விலையாக ரூ.7ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதே போல் மாடுகளும் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.80 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.