பக்ரீத் பண்டிகை: ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை; வேலூர் விவசாயிகள் மகிழ்ச்சி! - KV Kuppam Goat Market - KV KUPPAM GOAT MARKET
🎬 Watch Now: Feature Video
Published : Jun 11, 2024, 1:49 PM IST
வேலூர்: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சந்தை மேடு பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதேபோல, நேற்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் வெள்ளாடு, செம்மறி ஆடு, நெல்லூர் கிடா ஆடுகள் உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகள் என 1,500க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காகக் குவிந்தது.
தற்போது பக்ரீத்தை முன்னிட்டு, நேற்று சந்தை துவங்கியதில் இருந்தே ஆடு விற்பனை படுஜோராக நடைபெற்றது. மேலும், ஆட்டுச் சந்தையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. அதில், சிறிய ரக ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், பெரிய ரக ஆடுகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையிலும் விலை போனது. இந்த சந்தையில், உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
மேலும், இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றாக கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை வரும் 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் தான், ஆட்டுச்சந்தையில் ஏராளமான வியாபாரிகள் குவிந்திருந்தனர். தற்போது, இந்த வாரம் மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் வர்த்தகமாகியுள்ளதாக கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.