அதிமுக முன்னாள் அமைச்சர் தேமுதிக விஜய பிரபாகருக்கு ஆதரவாக ஐஸ் கட்டி தயாரித்து நூதன முறையில் பிரச்சாரம்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 8, 2024, 8:40 PM IST
விருதுநகர்: நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனால், அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நூதன முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகருக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாட்சியா புரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு நேரடியாகச் சென்று கிறிஸ்தவ மக்களிடம் ஆதரவு கோரினார்.
அப்போது பேசிய அவர்,"கிறிஸ்தவ மக்களுக்கு என்றும் அதிமுக உறுதுணையாக இருக்கும். விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகருக்குப் புரட்சி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர் சாட்சியா புரம் பகுதியிலிருந்த ஐஸ் கம்பெனிக்கு நேரடியாகச் சென்று அங்கு ஐஸ் கட்டி எப்படித் தயாரிப்பது என்பது குறித்து தெரிந்து கொண்டு ஐஸ் கட்டி தயாரித்து நூதன முறையில் விஜய பிரபாகருக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.