Live: அரக்கோணம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்! - EPS ELECTION CAMPAIGN - EPS ELECTION CAMPAIGN
🎬 Watch Now: Feature Video
Published : Apr 1, 2024, 6:03 PM IST
|Updated : Apr 1, 2024, 7:11 PM IST
ராணிப்பேட்டை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.02) ராணிப்பேட்டை சோளிங்கரில், அதிமுக சார்பில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன் நேரலை காட்சிகள்…18வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருச்சியில் இருந்து தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் களம் காணும் வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து பரப்பரை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக, நேற்றைய தினம் நாகப்பட்டினம் தொகுதி அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து திருவாரூர் மாவட்டம் தெற்கு வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Apr 1, 2024, 7:11 PM IST