சேலத்தில் எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ! - EPS Roadshow in Salem - EPS ROADSHOW IN SALEM
🎬 Watch Now: Feature Video
Published : Apr 17, 2024, 5:44 PM IST
|Updated : Apr 17, 2024, 6:00 PM IST
சேலம்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் விக்னேஷ்-ஐ ஆதரித்து ரோட் ஷோ நடத்துகிறார். அதன் நேரலைக் காட்சிகள்..இதன்படி, சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் தொடங்கி, வின்சென்ட் அம்பேத்கர் சிலை சுகவனேஸ்வரர் கோயில் கடைவீதி அக்ரஹாரம் வழியாக 3 கிலோமீட்டர் தொலைவில் சென்று கோட்டை மாரியம்மன் கோயில் முன்பு நிறைவு பெறுகிறது. இதில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் சாலையின் இரு புறங்களிலும் நின்று மலர் தூவி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் தொகுதியை பொறுத்தவரை, திமுக, அதிமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி என 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து, செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஐந்து முறை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Apr 17, 2024, 6:00 PM IST