LIVE: சேலம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்! - Edappadi Palaniswami Salem Campaign - EDAPPADI PALANISWAMI SALEM CAMPAIGN
🎬 Watch Now: Feature Video
Published : Apr 16, 2024, 5:38 PM IST
|Updated : Apr 16, 2024, 6:32 PM IST
சேலம்: சேலம் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் பி.விக்னேஷை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.16) சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன் நேரலை காட்சிகளைக் காணலாம்..தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகிறது. முன்னதாக, நேற்று (ஏப்.15) மத்திய சென்னை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி-யை ஆதரித்தும், தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்தும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.இதையும் படிங்க: 2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்! - 2023 UPSC Civil Service Exam Result
Last Updated : Apr 16, 2024, 6:32 PM IST