ஆர்ப்பரித்து ஓடும் காவிரி நீர்..கண்கவரும் திருச்சி முக்கொம்பு அணையின் ட்ரோன் காட்சி! - Mukkombu Dam Drone Shot - MUKKOMBU DAM DRONE SHOT
🎬 Watch Now: Feature Video
Published : Aug 2, 2024, 2:28 PM IST
திருச்சி: கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி ஆற்றின் நீர் பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக அணையின் உபரிநீர் 16 மதகுகள் மூலம் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூலை 28-ம் தேதி விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பெய்து வரும் மழையால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வழிந்தது.
இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதே போல, திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீரானது வந்து கொண்டிருக்கிறது.
திருச்சி முக்கொம்பிற்க்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் காவிரி ஆற்றில் 43,000 கன அடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீரும் செல்கிறது. காவேரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ள எச்சரிக்கை விடுத்தும், காவேரி மற்றும் கொள்ளிட கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ,துணி துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ , கால்நடைகளை குளிப்பாட்டுவது தடை விதித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
இந்த நிலையில், காவிரி நீர் முக்கொம்பு அணை வழியாக, இரு கரைகளையும் தொட்டு பாய்ந்தோடும் ட்ரோன் காட்சி கண்கவரும் வண்ணம் உள்ளது.