வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான வழக்கு: ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பு! - DMK RS Bharathi
🎬 Watch Now: Feature Video
Published : Apr 3, 2024, 12:10 PM IST
|Updated : Apr 3, 2024, 12:24 PM IST
சென்னை: வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்த முறை செயல்படுத்தப்பட்ட நடைமுறையையே இந்த முறையும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். அதன் நேரலை காட்சிகள்..தேர்தலின் போது வாக்காளர் தான் பதிவு செய்த சின்னத்தில் வாக்கு சரியாக பதிவாகியுள்ளதா என்பதை துல்லியமாகக் காட்டு கருவியாக விவிபேட்(vvpat) இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரத்திலிருந்தும் விவிபேட் இணைக்கப்பட்டுள்ளதால், வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்குகள் காகித வடிவில் வாக்குச்சீட்டுகளாக மாறிவிடுவதால் அவற்றை பின்னர் திறந்து எண்ணும் போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் அதற்கு இணையாக விவிபேட் இயந்திரத்தில் அச்சிடப்பட்டுள்ள சீட்டுகளும் சரியாக இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளலாம். இதன்மூலம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறுதலாக வேறு சின்னத்துக்கு தங்களுடைய ஓட்டு விழுந்திருந்தால் வாக்காளர்கள் அதை எளிதாக கண்டுபிடித்து புகார் அளிக்கவும் முடிகிறது. விவிபேட் இயந்திரத்தில் உள்ள சீட்டுகளையும் வாக்கு எண்ணிக்கையின் போது எண்ண வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Apr 3, 2024, 12:24 PM IST