“உதயநிதி மக்களை நேசிக்கக் கூடிய மனிதர்” - இயக்குநர் மாரி செல்வராஜ்! - Mari Selvaraj
🎬 Watch Now: Feature Video
திருச்சி: கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் உதயநிதிக்கு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். இந்நிலையில், கடந்த பல நாட்களாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வர வேண்டும் என திமுக தொண்டர்கள் பலர் கோரிக்கை வைத்த நிலையில்,
இன்று உதயநிதி தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
இது குறித்து திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற்று வரும் பெஸ்டம்பர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், “உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்றது மிகவும் சந்தோஷமாக உள்ளது.
வெகு நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த செய்தி தான் இது. தற்பொழுது இந்த பதவியேற்பு நடந்ததில் மிகவும் மகிழ்ச்சி. அனைவருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது போல் அவரது பணிகள் இருக்கும் என நம்புகிறேன். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உதயநிதி ஸ்டாலின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளது. அவர் மக்களை நேசிக்கக்கூடிய மனிதர். மக்களிடம் அன்பாக பழகக்கூடிய மனிதர், அவர் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார் என நிச்சயம் நம்புகிறேன்” என்றார்.