முடி திருத்தம் செய்து பாஜகவுக்கு வாக்கு சேகரித்த கூல் சுரேஷ்! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 15, 2024, 10:21 PM IST
திருவண்ணாமலை: நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் வரும் 17ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சாரத்தில் வேட்பாளர் சிலர் ஒட்டலில் டீ போட்டுக் கொடுத்து, ஐஸ் விற்பனை செய்து, வாக்காளர்கள் காலில் விழுந்து என்று வித்தியாசமான முறையில் விதவிதமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்தவகையில், பாஜக சார்பில் போட்டியிடும் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அஸ்வத்தாமன் என்பவருக்கு ஆதரவாக பொம்மிகுப்பம் பகுதியில் நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் வாலிபருக்கு முடி திருத்தம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பாஜக சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகத் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி உட்பட பல்வேறு இடங்களில் நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் வாக்குகள் சேகரித்தார்.
அதில் ஒருபகுதியாக, பொம்மிக்குப்பம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும்போது, அங்குள்ள முடி திருத்தம் செய்யும் கடையில் இளைஞர் ஒருவருக்கு முடி திருத்தம் செய்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வின்போது பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.