போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் ஓணம் நிகழ்ச்சி.. சிறந்த ஆடை அணிந்தவர்களுக்கு தங்க நாணயம் பரிசு! - Train Coach Restaurant onam fest - TRAIN COACH RESTAURANT ONAM FEST

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2024, 9:09 PM IST

கோயம்புத்தூர்: கோவை ரயில் நிலையம் அருகே போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் பெட்டி உணவகம் செயல்பட்டு வருகிறது. ஓணம் திருநாளான இன்று, ஓணம் சத்யா என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புக்கிங் செய்த 200 நபர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஓணம் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டன.

மேலும், இந்த 200 நபர்களில் யார் ஓணம் பண்டிகையை விவரிக்கும் வகையில் பாரம்பரிய உடை அணிந்து பார்வையாளர்களைக் கவரும் வகையில் வருகிறார்களோ அவர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என உணவகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பார்வையாளர்களைக் கவரும் விதமாக பாரம்பரிய உடை அணிந்து வந்த கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த டினோ-எஸ்டர் குடும்பத்தினருக்கு முதல் பரிசாக 4 கிராம் தங்க நாணயம் பரிசாக கொடுக்கப்பட்டது.

அதேபோல், கோவையைச் சேர்ந்த வினித் - அனிதா தம்பதிக்கு 2வது பரிசாக 2 கிராம் தங்க நாணயமும், 3வது பரிசாக இந்த நிகழ்வு குறித்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு அதிக பார்வையாளர்களை ஈர்த்த 
பாதுஷா என்பவருக்கு 1 கிராம் தங்க நாணயத்தை, அதன் நிர்வாக பங்குதாரர் டாக்டர். ஷயின் வழங்கிய நிலையில், உணவகத்தின் மேலாளர் ஜோசப் உடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.