கழன்று ஆடும் அரசுப் பேருந்து ஸ்டேரிங்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ! - COIMBATORE GOVERNMENT REPAIR BUS - COIMBATORE GOVERNMENT REPAIR BUS
🎬 Watch Now: Feature Video
Published : Jun 30, 2024, 1:27 PM IST
|Updated : Jun 30, 2024, 3:06 PM IST
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு அரசு மாநகரப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு அரசு பேருந்து(TN33N2973). இந்த பேருந்தில் தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக ஸ்டேரிங் கழன்ற நிலையிலும், எஞ்சின் பகுதி மூடப்படாமல் வயர்கள் அனைத்தும் வெளியே தெரியும்படி இருந்துள்ளது.
இதனை அப்பேருந்தில் சென்ற பயணி ஒருவர் வீடியோ எடுத்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ”நமது ஓட்டுநர்கள் மிகத் திறமையானவர்கள் தான், ஏதாவது சம்பவம் நடைபெறும் வரை” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில். இணையத்தில் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கோவை அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ஆய்வு மேற்கொண்டார். பின் பேருந்தை பராமரிப்பு பணிக்கு அனுப்பட்டு, பேருந்தை சரிவர பராமரிக்காதாக தொழில் நுட்ப பணியாளர்கள் இரண்டு பேர் மற்றும் உதவி இன்ஜினியர் ஆகிய மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.