திருவண்ணாமலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - 2024 LOK SABHA ELECTION - 2024 LOK SABHA ELECTION
🎬 Watch Now: Feature Video
Published : Apr 3, 2024, 3:20 PM IST
திருவண்ணாமலை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.
அதன் ஒரு பகுதியாகத் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சி.என் அண்ணாதுரைக்கு ஆதரவாக இன்று(புதன்கிழமை) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்காகத் திருவண்ணாமலை வருகை புரிந்த ஸ்டாலின், தேரடி வீதி கடலை கடை மூலையிலிருந்து காந்தி சிலை வரையிலும் நடந்து சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். இதனையடுத்து அங்குள்ள கடை ஒன்றில் தேநீர் அருந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிகழ்வில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவை துணைச் சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை நாடாளுமன்றத் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.