பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை… போராடி மீட்ட வீடியோ வைரல்! - Chennai child rescue video - CHENNAI CHILD RESCUE VIDEO
🎬 Watch Now: Feature Video
Published : Apr 28, 2024, 7:10 PM IST
சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் வெங்கடேசன் - ரம்யா தம்பதி. இவர்களுக்கு 7 மாதமே ஆன ஹைரின் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இன்று தாய் ரம்யா குழந்தையை பால்கனியில் வைத்திருந்த போது, கை தவறி குழந்தை கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தவறி விழுந்த குழந்தை முதல் மாடியில் உள்ள மேற்கூரையில் விழுந்துள்ளது. அப்பொழுது, குழந்தை விழுந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கதினர், குழந்தை கூரையில் விழுந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், அக்கம் பக்கத்தினர் அனைவரும் முதல் மாடியில் இருந்த வீட்டின் ஜன்னல் வழியாக உயிரை பணயம் வைத்து குழந்தையைப் போராடி மீட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, உடனடியாக குழந்தையை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
குழந்தையை மீட்கும் திக் திக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனி வழியாக குழந்தை கீழே விழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அக்கம் பக்கத்தினர் உயிரை பணயம் வைத்து குழந்தையை மீட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.