கோவையில் கவரிங் கடையில் அசால்டாக செல்போன் திருடும் நபர்; வைரலாகும் சிசிடிவி காட்சிகள்! - Theft CCTV
🎬 Watch Now: Feature Video
Published : Feb 22, 2024, 3:19 PM IST
கோவை: டவுன்ஹால் பெரிய கடை வீதியில் காவ்யா கோல்ட் கவரிங் என்ற கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு நேற்று (பிப்.21) மாலை பொருட்கள் வாங்க வந்த நபர் கடையில் சார்ஜ் போடப்பட்டிருந்த பெண் ஊழியரின் செல்போனை திருடியுள்ளார். பின்னர், தான் வாங்கிய பொருளுக்குக் காசை கொடுத்துவிட்டு கடையிலிருந்து வேகமாக வெளியேறினார்.
இந்நிலையில், கடையிலிருந்து பெண் ஊழியர் சரண்யா, சார்ஜ் போடப்பட்ட தனது செல்போனை தேடிய போது, காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளைப் பார்த்ததில் கடைக்கு வந்த நபர் செல்போனை திருடி, கொண்டு வந்திருந்த பைக்குள் தூக்கிப் போட்டுக் கொண்டு சென்றது பதிவாகியுள்ளது.
இதுகுறித்து, பெரிய கடை வீதி காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கடைக்கு வந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்தத் திருட்டில் ஈடுபட்டவர். இதேபோன்று, வேறு ஏதாவது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்திலும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மர்ம நபர் ஒருவர் கோல்டு கவரிங் கடையில் செல்போனை எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.