மாட்டு வண்டியில் ஊர்வலம்: இணையத்தை வட்டமடிக்கும் மணமக்கள் வீடியோ.. தஞ்சையில் நடந்த சுவாரஸ்யம்..! - Thanjavur District Peravurani

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 10:28 PM IST

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், பழனியம்மாள் இவர்களின் மகன் வெங்கடேஷ் மற்றும் பேராவூரணி அருகே நடுவிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பாதகுமார், விஜயராணி இவர்களின் மகள் நாகஜோதி ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

பொதுவாக, திருமணங்களில் குதிரை சாரட் வண்டிகளிலும் காரிலும், மணமக்கள் ஊர்வலமாக வருவதைப் பார்த்திருப்போம். ஆனால், மணமகன் வெங்கடேஷின் குடும்பம் பாரம்பரிய விவசாய குடும்பம் என்பதால், தன்னுடைய திருமணத்தில் கிராம முறைப்படி, திருமண ஊர்வலம் நடைபெற வேண்டுமென நினைத்த வெங்கடேஷ், தன்னுடைய நண்பர்களிடம் இதைத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மணமகனின் நண்பர்கள் வெகு விமர்சையாக மாடுகளை வைத்து ஊர்வலம் நடத்திட வேண்டும் என முடிவெடுத்தனர். இதனைத் தொடர்ந்து, ஆத்தாளூர் வீரமாகாளி அம்மன் கோயிலில் திருமணம் முடிந்த பிறகு மணக்கோலத்தில் மணமக்கள் இருவரையும் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஏற்றி, மாட்டு வண்டியை மணமகன் ஓட்ட, திருமண விருந்து நடைபெற்ற மண்டபம் வரை சுமார் 2 கிலோமீட்டர் ஊர்வலமாக வந்தனர்.

இந்த திருமணத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள், ஊர் பெரியோர்கள் இதனை வெகுவாக பாராட்டிச் சென்றனர். இதுமட்டும் அல்லாது, இது பாரம்பரிய உணர்த்தும் விதமாக இருந்ததால், பேருந்துகளில் சென்ற பயணிகள், சாலையில் சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தவாறு சென்றனர். மேலும், பேராவூரணியில் இவர்களுடைய திருமணம் பேசுபொருளாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.