"அமரன் பேர சொன்னால் தானே..இரட்டை இலைக்கு வாக்குகள் பறக்கும்" - நடிகர் கார்த்திக் பிரச்சாரம்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 12, 2024, 6:19 PM IST
|Updated : Apr 12, 2024, 6:46 PM IST
தேனி: தேனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமியை ஆதரித்து ஆண்டிபட்டியில் நடிகரும், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பிரசார கூட்டத்தில், அமரன் திரைப்படத்தின் பாடலை பாடுமாறு அங்கிருந்த கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் கேட்டனர். தாய்மார்களுக்காக இந்த பாடல் என்று கூறிய கார்த்திக், சூழ்நிலைக்கு தகுந்தவாறு பாடல் வரிகளை மாற்றி பாடினார். அமரன் திரைப்படத்தில் வரும் பாடலான போட்டாலே விறுவிறுக்கும் சர்தார் பான்.. அமரன் கானா பாட்ட கேட்டாலே கிறுகிறுக்கும்..மச்சி நான் வெத்தல போட்ட சோக்குல நான் கப்புன்னு குத்துனேன் மூக்குல..அட வந்துது பாரு ரத்தம் இந்த அமரன் மனசு சுத்தம் வார வத்தி எறக்கம்.. அமரன் வந்து நின்னா சறுக்கும்..அமரன் பேரச் சொன்னால் தானே இரட்டை இலைக்கு வாக்குகள் பறக்கும்" என்று பாடினார்.
இந்த பாடலைக் கேட்ட அங்கிருந்த அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் கை தட்டி உற்சாகமடைந்தனர். பின்னர் அனைவரிடமும் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.